பள்ளி மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட், மார்க் சீட்
பள்ளி மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட், மார்க் சீட்
UPDATED : டிச 11, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
எனினும், அவ்வப்போது ஆள்மாறாட்ட முறைகேடு உட்பட பல சம்பவங்கள் நடந்துவிடுகின்றன.
மேலும், போலி மதிப்பெண் சான்றிதழ்களும் அவ்வப்போது துறையால் கண்டுபிடிக்கப்படுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, மாணவர்களிடம் இருந்து முன்கூட்டியே புகைப்படங்களைப் பெற்று, அதை ஸ்கேன் செய்து கம்ப்யூட்டர் மூலம் ஹால் டிக்கெட்டுகளை பிரின்ட் எடுத்து மாணவர்களுக்கு வழங்க உள்ளது. அதேபோல், புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கவும் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், தேர்வில் முறைகேடுகளை தவிர்ப்பதுடன், உண்மையான மாணவர்களின் கையில் மதிப்பெண் சான்றிதழ்கள் கிடைப்பதையும் உறுதி செய்ய முடியும் என்று தேர்வுத்துறை நம்புகிறது.
இந்த மதிப்பெண் சான்றிதழ்களை, போலியாக தயாரிக்க முடியாத அளவிற்கு அதில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற உள்ளன. இந்தத் திட்டங்கள், 2009-2010ம் ஆண்டில் நடைபெறும் பொதுத் தேர்வில் இருந்து அமலுக்கு வருகின்றன. சோதனை ரீதியாக பல்வேறு டிப்ளமா தேர்வுகளில் அமல்படுத்தி பார்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, நேரடியாக எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதிவரும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அமல்படுத்தப்படும்.
இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதில் இடையூறுகள் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதால், வரும் கல்வியாண்டில் இருந்து நடைபெறும் பொதுத் தேர்வுகளில் புதிய முறை அமல்படுத்தப்படும் என்று துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்த அறிவிப்புகள், வரும் நிதியாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
