ஹார்வர்டு, ஸ்டான்போர்டு பல்கலைகளை விட ஐ.ஐ.எம்.,-ல் சேர்வது கடினம்!
ஹார்வர்டு, ஸ்டான்போர்டு பல்கலைகளை விட ஐ.ஐ.எம்.,-ல் சேர்வது கடினம்!
UPDATED : டிச 12, 2008 12:00 AM
ADDED : மார் 18, 2009 08:39 AM
கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.,) வழங்கும் மேனேஜ்மென்ட் படிப்புகளில் அட்மிஷன் நடைபெறுகிறது. அதேபோல், ஜிமேட் மதிப்பெண் அடிப்படையில் அனைத்து முக்கிய கல்வி நிறுவனங்களிலும் அட்மிஷன் நடைபெறுகிறது.
அகமதாபாத், ஐ.ஐ.எம்., வழங்கும் ஓர் ஆண்டு முதுநிலை எக்சிகியூட்டிவ் மேனேஜ்மென்ட் (பி.ஜி.பி.எக்ஸ்.,) படிப்பில் சேரவும் ஜிமேட் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இப்படிப்பின் 2009-10 ஆண்டிற்கான சேர்க்கையில் 800க்கு 722 மதிப்பெண்கள் பெற வேண்டியிருந்தது. ஆனால், ஹார்வர்டு, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற ஜிமேட் கட்-ஆப் மதிப்பெண் 710 பெற்றிருந்தாலே போதுமானதாக உள்ளது.
எனினும், அகமதாபாத் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்தில் நன்றாக படித்து வெளியேறும் மாணவர்களுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருப்பது அனைவரும் அறிந்ததே.
