சானியாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது எம்.ஜி.ஆர். பல்கலை
சானியாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது எம்.ஜி.ஆர். பல்கலை
UPDATED : டிச 12, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: எம்.ஜி.ஆர்., பல்கலைக் கழகம் சார்பில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
சென்னை மதுரவாயல் டாக்டர். எம்.ஜி.ஆர்., பல்கலைக் கழக 17வது பட்டமளிப்பு விழா டிச. 6ம் தேதி நடந்தது. விழாவில் சந்திராயன்-1 திட்ட இயக்குனர் அண்ணாதுரை மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. பயிற்சிக்கு சென்றிருந்த சானியாவால் அன்றைய தினம் நடந்த விழாவில் பங்கேற்க முடியவில்லை.
டிச. 6ம் தேதி எம்.ஜி.ஆர்., பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் சானியாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் பட்டத்தை வழங்கி பேசுகையில்,“பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னையில் சானியா மிர்சா தனது பெயரில் டென்னிஸ் பயிற்சி அகாடமி துவங்க வேண்டும் என்றார்.
சானியா மிர்சா பேசுகையில்,‘சின்ன வயதில் டென்னிஸ் வீராங்கனை அல்லது டாக்டராக நான் ஆசைப்பட்டேன். டென்னிஸ் வீராங்கனை ஆகி விட்டேன். இப்போது எம்.ஜி.ஆர்., பல்கலைக் கழகம் மூலம் எனது இரண்டாவது ஆசையும் நிறைவேறி விட்டது. நான் விரைவில் டென்னிஸ் பயிற்சி மையம் துவங்க இருக்கிறேன். அதன் மூலம் மேலும் பல சானியாக்களை உருவாக்குவேன்’ என்றார்.
