தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சத்துணவுக் கூடம் கட்டியும் பயனில்லை: மரத்தடியில் மதிய உணவு

சத்துணவுக் கூடம் கட்டியும் பயனில்லை: மரத்தடியில் மதிய உணவு

சத்துணவுக் கூடம் கட்டியும் பயனில்லை: மரத்தடியில் மதிய உணவு


UPDATED : டிச 13, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அண்ணா சாலையில், அறிஞர் அண்ணா ஆண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அனைவருக்கும் சத்துணவு வழங்கப்படுகிறது. 
பள்ளியில் பல ஆண்டுகளாக சமையல் அறை, சத்துணவுக் கூடம் இல்லாததால் மரத்தடியில் சுகாதாரமற்ற சூழலில் சமையல் நடந்தது. மழைக்காலங்களில் சமையலர்கள் சமையல் செய்ய கடும் அவதிப்பட்டனர். எனவே, நகராட்சி நிர்வாகம் பள்ளி வளாகத்தில் சத்துணவுக் கூடம் கட்ட முடிவு செய்தது. ஐந்து லட்சம் நிதி ஒதுக்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் சத்துணவுக் கூடம் மற்றும் சமையல்  அறை தனித்தனியே கட்டப்பட்டன.
ஆனால், இதுவரை கட்டடங்கள் திறக்கப்படவில்லை. திறப்பு விழா நடைபெறாததால், கட்டடத்தை பயன்படுத்தாமல் மூடியே வைத்துள்ளனர். தற்போது, கட்டடம் இருந்தும் திறந்த வெளியில் சமையல் நடைபெறும் அவலம் நீடிக்கிறது. மரத்தடியில் சமையல் செய்யும் போது மரத்திலிருந்து பூச்சிகள், இலைகள் போன்றவை உணவில் விழுகின்றன.
இதனால் மாணவர்கள் சுகாதாரமற்ற உணவை உண்ண வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us