தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெங்களூருவில் ரூ.100 கோடியில் ‘நேனோ அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்’

பெங்களூருவில் ரூ.100 கோடியில் ‘நேனோ அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்’

பெங்களூருவில் ரூ.100 கோடியில் ‘நேனோ அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்’


UPDATED : டிச 13, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

‘இந்த நிறுவனத்திற்கான கட்டடப் பணிகள் இன்னும் சில மாதங்களில் துவங்கும்’ என்று பெங்களூருவில் நடந்த நேனோ 2008 மாநாட்டில், பிரதமருக்கான அறிவியல் ஆலோசனைக் குழு தலைவர் பேராசிரியர் சி.என்.ஆர். ராவ், தெரிவித்தார்.
கர்நாடகா உள்துறை அமைச்சர் ஆச்சார்யா பேசுகையில், ‘கொல்கத்தா மற்றும் மொகாலி ஆகிய பகுதிகளை அடுத்து பெங்களூருவிலும் நேனோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் துவங்கப்பட உள்ளது.
நேனோ டெக்னாலஜி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான சிறப்பு கல்வி நிறுவனமாக இது இயங்கும். இன்பர்மேஷன் டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி ஆகியவற்றை அடுத்து, இந்தியாவின் நேனோ நகரமாக பெங்களூரு விளங்கும்’ என்றார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘நேனோ அறிவியல் மற்றும் நேனோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (ஆர் அண்ட் டி) கர்நாடகா அனைத்து சதகமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். தொழில்ரீதியாகவும் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிறு, நடுத்தர, பெரிய அளவிலான நிறுவனங்கள் அமைய ஊக்குவிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில், இந்திய தேசிய அறிவியல் அகடமி விஞ்ஞானி சக்ரவர்த்திக்கு பெங்களூரு நேனோ தேசிய விருது வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us