தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர்வதேச தன்மை வாய்ந்த ஐரோப்பிய உயர்கல்வி

சர்வதேச தன்மை வாய்ந்த ஐரோப்பிய உயர்கல்வி

சர்வதேச தன்மை வாய்ந்த ஐரோப்பிய உயர்கல்வி


UPDATED : நவ 13, 2013 12:00 AM

ADDED : நவ 13, 2013 02:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2013 12:00 AM ADDED : நவ 13, 2013 02:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர் நகர்வு

மேற்கூறிய செயல்பாட்டின் ஒரு அம்சமாக போலோக்னா செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்கள், பல ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது எளிதாகும். மேலும், இதன்மூலம் வேலைவாய்ப்பை பெறுவதற்கு தேவையான பலவிதமான திறன்களை, மாணவர்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்கிறது.

EHEA அமைப்பில் இடம்பெற்ற 47 நாடுகளும், Three-cycle degree system -ஐ ஒப்புக்கொண்டுள்ளன மற்றும் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் தரமான உயர்கல்வி வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்கான விதிமுறைகள் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டுள்ளன. மேலும், வெளிநாட்டு படிப்பு காலகட்டத்தை அங்கீகரிப்பதற்கான கிரெடிட் சிஸ்டம் மற்றும் பொது டிப்ளமோ அம்சம் உள்ளிட்ட பல அம்சங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

ஐரோப்பாவில், நன்கு முறைப்படுத்தப்பட்ட டாக்டோரல் படிப்புகளின் விரைவான மேம்பாடு, அக்கண்டத்தை கல்விக்கான ஒரு கவர்ச்சிகரமான தளமாக மாற்றுவதில் பெரும்பங்காற்றுகின்றன. பல்கலைகளில் வழக்கமான பாடங்களுடன், கற்றலின் பல்வேறான கலாச்சாரங்கள் மற்றும் வித்தியாசமான கல்வி அமைப்பிலும் அனுபவம் பெறுகிறார்கள்.

மேலும், இங்கு படிக்கும் மாணவர்கள், புதிய மொழிகளை கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளைப் பெறுவதோடு, உலகளாவிய தேசிய அடையாளங்களைக் கொண்ட மனிதர்களுடன் பணிபுரியும் அனுபவத்தையும் பெறுகிறார்கள். அதேசமயம், ஐரோப்பாவில், ஆங்கிலத்தில் நடத்தப்படும் படிப்புகளில் சேரும் வாய்ப்பும் அதிகமாக உள்ளன. சர்வதேச மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், நாட்டிற்கு நாடு வேறுபட்டு காணப்படும்.

உதவித்தொகைகள்

ஐரோப்பிய கண்ட அளவிலும், தேசிய அல்லது பிராந்திய அளவிலும், சர்வதேச மாணவர்களுக்கு உதவித்தொகை வாய்ப்புகள் உள்ளன. ஐரோப்பாவில் படிப்பது மற்றும் அதற்கு விண்ணப்பித்தல் குறித்த தகவல்களை விரிவான முறையில் அறிய, Study in Europe என்ற இணையதளம் செல்லலாம்.

தகுதியுள்ள சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைகளில் பிரபலமானது Erasmus Mundus என்பதாகும். Erasmus Mundus முதுநிலைப் படிப்பு அல்லது இணை டாக்டரேட் படிப்புகளை ஐரோப்பிய பல்கலைகளில் மேற்கொள்ள இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுபோன்ற உதவித்தொகைகளுக்கு, இதுவரை 2,000 இந்திய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்று ஐரோப்பிய கமிஷனின் தகவல்கள் கூறுகின்றன.

Erasmus Mundus மாணவர் மற்றும் முன்னாள் மாணவர் அசோசியேஷன், மாணவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும், சர்வதேச புரபஷனல் மற்றும் தனிப்பட்ட நெட்வொர்க் அனுபவத்தை தருவதை நோக்கமாக கொண்டுள்ளது.

Erasmus+ ன்ற பெயர் கொண்ட அடுத்த கல்வி ப்ரோகிராம் மூலமாக, மாணவர்களுக்கும், ஆசிரியர் போக்குவரத்துக்கும் அதிகளவில் நிதியுதவி செய்ய ஐரோப்பிய கமிஷன் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ப்ரோகிராம், 1 லட்சத்தும் 35 ஆயிரம் மாணவர்களுக்கு நிதியுதவியை அளிப்பதோடு, ஆசிரியர் பரிமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.

ஐரோப்பிய பல்கலைகள், தற்போதைய காலகட்டத்தில், சர்வதேச அளவில் தங்களின் கவனத்தை அதிகரித்துள்ளன. சர்வதேச மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுப்புதல் மற்றும் ஏற்றல், பல மொழிகளில் படிப்புகளை வழங்குதல், சர்வதேச தன்மையுள்ள வகையில் பாடத்திட்டங்களை மேம்படுத்துதல், உலகளாவிய அளவில் பல்கலைகளுடன் ஒத்துழைப்புகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அவை மேற்கொள்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us