UPDATED : நவ 14, 2013 12:00 AM
ADDED : நவ 14, 2013 10:26 AM
அ நிறம் | அளவு
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, இயக்குனர், நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில், 14ம் தேதி (இன்று), பள்ளிகளுக்கு வேலை நாள்; மொஹரம் பண்டிகை, 15ம் தேதி என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, பள்ளிகளுக்கு 15ம் தேதி தான் விடுமுறை என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நவ., 14ல் மொஹரம் பண்டிகை என அறிவிக்கப்பட்டதால், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என மாணவர்களும், ஆசிரியர்களும் நினைத்திருந்தனர். தற்போது, மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மறைந்த பிரதமர், நேரு பிறந்த நாளான இன்று அனைத்துப் பள்ளிகளிலும், குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது. இதனால், பெரும்பாலான பள்ளிகள் அரை நாள் மட்டுமே இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
