UPDATED : நவ 14, 2013 12:00 AM
ADDED : நவ 14, 2013 10:02 AM
கோவை: கல்லூரியில் மொபைல் போன் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மாணவனை சரமாரியாக வெட்டிய சக மாணவர் கைது செய்யப்பட்டார்.
கோவை, பீளமேடைச் சேர்ந்தவர் அசோக்குமார், 19; சரவணம்பட்டி பகுதியிலுள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அசோக்குமார் தன்னுடைய மொபைல் போன் ஒன்றை இவருடன் படிக்கும் தானேஷிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் வகுப்பறையில் மொபைல் போன் குறித்து இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். செய்முறை பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் கத்தி போன்ற பொருளால் தானேஷின் நெஞ்சுப் பகுதி, வயிறு, முதுகு உள்ளிட்ட இடங்களில் அசோக்குமார் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து தானேஷ் போலீசில் புகார் கொடுத்தார். வழக்கு பதிந்த போலீசார் அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
