தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி

வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி

வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி


UPDATED : நவ 14, 2013 12:00 AM

ADDED : நவ 14, 2013 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2013 12:00 AM ADDED : நவ 14, 2013 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பலூர்: "வங்கி தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு கையேடுகளுடன் கூடிய இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. தகுதியுடையோர் பங்கேற்று பயன் பெறலாம்" என, பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.

கலெக்டர் வெளியிட்ட அறிக்கை: "நவம்பர் 30ம் தேதி வங்கித்தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு என்று சிறப்பு பயிற்சி வகுப்புகள் இலவசமாக எடுக்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பங்கு பெறுபவர்களுக்கு இலவச கையேடுகளும் வழங்கப்படவுள்ளது.

நாளை, 15ம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. தொடர்ந்து 10 நாட்களுக்கு அனுபவம் வாய்ந்த வங்கி மேலாளர்கள் பங்குபெற்று பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளார்கள். இந்த 10 நாட்களும் எந்தெந்த நேரத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்பது 15ம் தேதி நடக்கும் வகுப்பில் தெரிவிக்கப்படும்.

இப்பயிற்சி குறித்த மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள 73730-03579 என்ற மொபைல் நம்பரிலோ, இந்தியன் வங்கி பெரம்பலூர் கிளையின் முதுநிலை மேலாளர் வரதனை 94422-71101 என்ற மொபைல் நம்பரிலோ தொடர்பு கொள்ளலாம்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் அதிக அளவில் வங்கித்தேர்வில் தேர்ச்சி பெற்று வங்கிகளில் உயர் பதவிகளை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்பினை தகுதியுடையோர் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us