எம்.எல்., வகுப்பின் தரத்தை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
எம்.எல்., வகுப்பின் தரத்தை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
UPDATED : டிச 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: ‘எம்.எல்., வகுப்பில் கற்பிக்கும் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும்’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட் வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில், முதுநிலை சட்டப்படிப்பான எம்.எல்., படிப்பு டத்தப்படுகிறது. இதை முறையாக நடத்துவது இல்லை. எம்.எல்., தேர்வுகளை நடத்தும் முன் விதிகளின்படி வகுப்புகளை முறையாக நடத்த உத்தரவிட வேண்டும்’ என றியுள்ளார்.
இதை விசாரித்த தலைமை நீதிபதி கங்குலி, நீதிபதி சந்துரு அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:
எம்.எல்., வகுப்பில் பாடங்களைப் பயிற்றுவிக்க முறையான தரம் பின்பற்றப்படுகிறதா என்பதை சட்டக் கல்வி இயக்குனர் உறுதி செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
எம்.எல்., வகுப்பில் கற்பிக்கும் தரம் மற்றும் அனைத்து அம்சங்களையும் ஆராய அதிகாரிகள் அடங்கிய குழுவை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமிக்க வேண்டும். இவ்வாறு ‘முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
