தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘மாணவர் தற்கொலைக்கு தேர்வு மட்டும் காரணம் அல்ல’

‘மாணவர் தற்கொலைக்கு தேர்வு மட்டும் காரணம் அல்ல’

‘மாணவர் தற்கொலைக்கு தேர்வு மட்டும் காரணம் அல்ல’


UPDATED : டிச 16, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


புதுடில்லி:
கடந்த 2004ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை 16,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கையில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் புரந்தரேஸ்வரி கூறியதாவது:
தற்போதைய கல்வித் திட்டத்தில் உள்ள தேர்வுகளால் ஏற்படும் அழுத்தம் காரணமாக, மாணவர்களிடம் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்த தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு எவ்வித பரிந்துரைகளையும் அளிக்கவில்லை. குழந்தைகள் மன அழுத்தத்திலும், அதிக மன உளைச்சலிலும் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், மாணவர்களின் தற்கொலைக்கு தேர்வு மட்டுமே காரணம் என கூற முடியாது.
இந்தாண்டு செப்டம்பர் முதல் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்காக கவுன்சிலிங், உதவி மையங்கள், இணைய தளங்கள் மூலம் கவுன்சிலிங் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. மேலும், தேர்வு அழுத்தத்தைக் குறைப்பதற்காக, மத்திய உயர்நிலை கல்வி மையம் (சி.பி.எஸ்.சி.,) பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us