மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க! பொள்ளாச்சியில் இன்று "ஜெயித்துக் காட்டுவோம்"
மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க! பொள்ளாச்சியில் இன்று "ஜெயித்துக் காட்டுவோம்"
UPDATED : நவ 16, 2013 12:00 AM
ADDED : நவ 16, 2013 09:42 AM
பொள்ளாச்சி: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும், தேர்வை பயமின்றி எதிர்கொள்வதற்கும் தினமலர் நாளிதழ் சார்பில், இன்று பொள்ளாச்சியில் "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சி துவங்குகிறது.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வை சிறப்பாக எதிர்கொள்வதற்காக "தினமலர்" நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது, தேர்வை பயமின்றி எதிர்கொள்வது, முழு மதிப்பெண் பெறுவது, நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது குறித்து மாணவர்களுக்கு ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன.
பொள்ளாச்சியில், தினமலர் டி.வி.ஆர்., அகாடமி சார்பில் "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சி இன்று துவங்கி, நாளையும் நடக்கிறது. பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி, நேரு குரூப் ஆப் இன்ஸ்ட்டியூஷன், எஸ்.என்.எஸ்., இன்ஸ்ட்டியூஷன் ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை வழங்குகிறது.
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள நூற்றாண்டு விழா அரங்கில் நடக்கிறது. பத்தாம் வகுப்பு தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு, இன்று (16ம் தேதி) காலை 9.00 மணிக்கும், மதியம் 1.00 மணிக்கு பத்தாம் வகுப்பு ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கான நிகழ்ச்சியும் நடக்கிறது.
கோவை ஜி.ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் டிப்ஸ் வழங்கவுள்ளனர். தமிழ் - கலைசெல்வி, ஆங்கிலம் - வித்யா டோயல், கணிதம்-கீதா, இயற்பியல்- சிகாமணி, உயிரியல்- ஜெயந்தி, சமூக அறிவியல்- உஷாராணி ஆகியோர் டிப்ஸ் வழங்குகின்றனர்.
நாளை (17ம் தேதி) பிளஸ் 2 "சயின்ஸ் குரூப்" மாணவர்களுக்கு நிகழ்ச்சி காலை 9.00 மணிக்கும், மதியம் 1.00 மணிக்கு "ஆர்ட்ஸ் குரூப்" மாணவர்களுக்கான நிகழ்ச்சியும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழ்- சிவகாமி, ஆங்கிலம் - டெய்சி, கணிதம்- மேகலா, இயற்பியல்- சரவணாகுமார், வேதியியல்- சாந்திதேவி, தாவரவியல்- சாந்தி, விலங்கியல்-சுமதி, கம்ப்யூட்டர் சயின்ஸ்- கிருத்திகா, பொருளியல்- உஷாராணி, வணிகவியல்- வித்யா டோயல், கணக்குப் பதிவியல்- கீதா, வணிகக் கணிதம்- பாலசுந்தரம் ஆகியோர் டிப்ஸ் வழங்குகின்றனர்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் பங்கேற்கலாம். ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களுக்கு, இறையன்பு ஐ.ஏ.எஸ்., எழுதிய தன்னம்பிக்கை குறித்த "ஜெயித்துக் காட்டுவோம்" புத்தகமும், ஒவ்வொரு பாடத்துக்கும் முக்கிய வினாக்கள், பொதுத்தேர்வு வினாத்தாள் தயாரிக்கும் "புளூபிரிண்ட்" புத்தகமும் வழங்கப்படுகிறது.
இந்தாண்டு மாணவர்களுக்கு சிறப்பாக "பவர் பாயிண்ட் பிரசண்டேஷன்" மூலம் குறிப்புகள் தரப்படுகின்றன. எனவே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெறலாம்.
