தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இரவில் அதிக நேரம் விழித்திருக்கும் குழந்தைகளின் செயல் திறன் குறையும்

இரவில் அதிக நேரம் விழித்திருக்கும் குழந்தைகளின் செயல் திறன் குறையும்

இரவில் அதிக நேரம் விழித்திருக்கும் குழந்தைகளின் செயல் திறன் குறையும்


UPDATED : நவ 17, 2013 12:00 AM

ADDED : நவ 17, 2013 09:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2013 12:00 AM ADDED : நவ 17, 2013 09:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், இரவு 11:30 மணிக்குப் பின் படுக்கைக்கு செல்வதால், அவர்களுடைய மதிப்பெண் கிரேடு குறைவதாக, கலிபோர்னிய பல்கலைக்கழக உளவியல் ஆராய்ச்சி துறை தலைவர் லாரென் கூறியுள்ளார். இந்த ஆய்வுக்காக, 13 வயது முதல் 18 வயது வரையுள்ள, 2,700 மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தூங்கும் நேரத்தில், படிப்பதால், அடுத்த நாள் அவர்களின் கற்கும் திறனில் குறைபாடு ஏற்படுவது, அவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. இந்த ஆய்வு, 1995 மற்றும் 1996ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது. கடந்த, 2001 - 02ம் ஆண்டு, அதே மாணவ, மாணவியரிடம் காணப்படும் மாற்றங்கள் குறித்து மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இரவு, 11:15 மணிக்குப் பின் தூங்கச் செல்லும் மாணவ, மாணவியரின் தேர்வுத் திறன் அதிகரிக்கவில்லை என்பதும், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் கவலைக்குரியதாக இருந்ததும், அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தைகள் இரவில் சீக்கிரம் தூங்குவதற்கு பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும் என்றும், தங்களுடைய படிப்பை விரைந்து முடிப்பதற்கு, பெற்றோர் உதவ வேண்டும் என்றும், இந்த ஆய்வுக் குழுவின் தலைவர் லாரென் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us