ம.பி.,தேர்தல்: அரசு கல்லூரி மாணவர்களுக்கு பா.ஜ., வாக்குறுதி
ம.பி.,தேர்தல்: அரசு கல்லூரி மாணவர்களுக்கு பா.ஜ., வாக்குறுதி
UPDATED : நவ 17, 2013 12:00 AM
ADDED : நவ 17, 2013 09:33 AM
போபால்: மத்தியப் பிரதேசத்தில் அரசுக்கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படவுள்ளதாக பா.ஜ.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் 25ம் தேதி நடக்கிறது. இதையொட்டி பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை போபாலில் நேற்று வெளியிடப்பட்டது. முதல்வர் சிவராஜ் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநில பாஜக தலைவர் நரேந்திர சிங் தோமர் மற்றும் முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் தேர்தல் அறிக்கை கமிட்டி தலைவர் விக்ரம் வர்மா வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து முதல்வர் சிவராஜ் சிங், பேசியதாவது:மாநிலத்தில் இளைஞர்கள் பெருமளவில் உள்ளனர். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றார்.
