பி.இ. தேர்வில் மாநில ரேங்க்: மாணவிக்கு பாராட்டு சான்றிதழ்
பி.இ. தேர்வில் மாநில ரேங்க்: மாணவிக்கு பாராட்டு சான்றிதழ்
UPDATED : நவ 17, 2013 12:00 AM
ADDED : நவ 17, 2013 09:41 AM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி: பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் மாநில ரேங்க் பெற்ற மாணவிக்கு நெல்லையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நெல்லை வடக்கு ரோட்டரி சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக நெல்லை மனேன்ாமணியம் சுந்தரனார் பல்கலைக் கழக சமூகவியல் துறை பேராசிரியர் கண்ணன் பங்கேற்று, திருநங்கைகள் பற்றிய ஆராய்ச்சி விளக்கங்களை தெரிவித்தார். செயலாளர் மீரான் மைதீன், மாரியப்பன் உட்பட பலர் பேசினர்.
பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் மாநில அளவில் 27வது ரேங்க் பெற்ற அண்ணா பல்கலைக் கழக மாணவி ராதா ரம்யாவை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் கராத்தே போட்டியில் முதலிடம் பெற்ற அஸ்வின் அன்புவுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெங்கடாசலம் நன்றி கூறினார்.
