தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியல் துறையில் அதிக முதலீடு வேண்டும்: சி.என்.ஆர். ராவ்

அறிவியல் துறையில் அதிக முதலீடு வேண்டும்: சி.என்.ஆர். ராவ்

அறிவியல் துறையில் அதிக முதலீடு வேண்டும்: சி.என்.ஆர். ராவ்


UPDATED : நவ 17, 2013 12:00 AM

ADDED : நவ 17, 2013 09:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2013 12:00 AM ADDED : நவ 17, 2013 09:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்ட வேதியல் பேராசியரான சி.என்.ஆர். ராவ், அறிவியல் துறையில் இந்தியா அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றும் அந்த முதலீடு பணமாக மட்டுமில்லாமல் மாணவர்கள், நிறுவனங்களில் முதலீடு வேண்டும் என்று கூறியுள்ளார்.

திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு வந்த ராவ் பேசுகையில், எனது பணி்க்கு கிடைத்த பாரத ரத்னா விருதால் கவுரவிக்கப்படுவது மிக்க மகிழ்ச்சி, இதற்காக பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், இது எனது பணிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும். இப்பட்டத்தை எனது குடும்பத்திற்கும் மற்றும் மாணவர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.

நான் 64 ஆண்டுகளாக வேதியல் பேராசிரியராகவும் 52 ஆண்டுகளால் ஆய்விலும் சேவையாற்றினேன். 1,600 கட்டுரைகளும் 48 புத்தகங்களும் எழுதினேன். இந்த விருதால் எனது இத்தகைய சேவைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.இந்தியா ஆய்வில் முதல் ஐந்து நாடுகள் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும்.ஆய்விக்கு முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்க வேணடும் என அரசிற்கு வலியுறுத்தினார்.இவ்வாறு சீனா மற்றும் தென்கொரியாவுடன் போட்டியிடமுடியும்.

சீனா அறிவியலில் துறையில் நிறைய முதலீடு செய்துள்ளது. அது போல இந்தியாவும் அதிகமான முதலீடு செய்ய வேண்டும். இது பணமாக மட்டும் அல்லாமல் மக்கள் மீதும் மற்றும் நிறுவனங்களில் அந்த அறிவியல் துறை முதலீடு செய்ய வேண்டும் .நாட்டின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி எதிர்காலம் பிரகாசமாக உள்ளது . ஆனால் அறிவார்ந்த சவால் இளைஞர்களின் மனதை கவர்ந்து உள்ளது .

விஷயங்கள் இப்போது மாறி- மாணவர்கள் தூய அறிவியல் ஆராய்ச்சி வருகிறார்கள். நான் இன்னும் நிறைய இளைஞர்கள் அறிவியல் துறைக்கு மேலும் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனக்கு கிடைத்த இந்த விருது தனது மாணவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us