தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஹார்டுவேர் இன்ஜினியர்களுக்கு மவுசு: 2 ஆண்டில் 12 லட்சம் பேர் தேவை!

ஹார்டுவேர் இன்ஜினியர்களுக்கு மவுசு: 2 ஆண்டில் 12 லட்சம் பேர் தேவை!

ஹார்டுவேர் இன்ஜினியர்களுக்கு மவுசு: 2 ஆண்டில் 12 லட்சம் பேர் தேவை!


UPDATED : டிச 17, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சர்வதேச அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கிடைத்து வந்த ப்ராஜக்ட் ஆர்டர்கள் குறைந்துவிட்டன. அதனால், பல நிறுவனங்கள் இழப்பை சந்திக்கின்றன; ஆட்குறைப்பும் செய்யப்படுகிறது.
பல துறைகளுக்கும் பயன்படும் வகையில், சாப்ட்வேர் வடிவமைப்பது தான் சாப்ட்வேர் இன்ஜினியர்களின் பணி. அந்த சாப்ட்வேர் வசதிகளை செய்து தருவதும், ஹார்டுவேர் மற்றும் கம்யூனிக்கேஷன் தொடர்பை ஏற்படுத்துவதும் ஹார்டுவேர் இன்ஜினியர்களின் பணி.
ஹார்டுவேர் இன்ஜினியர்களுக்கு இன்னமும் மவுசு உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, ஹார்டுவேர் எலக்ட்ரானிக் சந்தை மதிப்பு இன்னும் இரண்டாண்டில் மூன்று லட்சம் கோடியை எட்டும்; அதுபோல, 2010க்குள் ஹார்டுவேர் இன்ஜினியர்கள் 12 லட்சம் பேர் தேவைப்படுவர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர் இல்லாத நிறுவனங்கள், அலுவலகங்களே இல்லை. சாதாரண பில் போடுவதற்கும் கம்ப்யூட்டர் தான் பயன்படுத்தப்படுகிறது. 50 கம்ப்யூட்டருக்கு ஒரு ஹார்டுவேர் இன்ஜினியர் தேவை.
அப்படிப் பார்த்தால், இந்தியாவில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் போது, அதற்கேற்ப ஹார்டுவேர் இன்ஜினியர்கள், அவர்களை சார்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள் தேவையும் அதிகரிக்கும். ஹார்டுவேர் படிப்புகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை செலவழிக்க வேண்டும்.
ஹார்டுவேர் பயிற்சி பெற்று இரண்டாண்டு வேலை அனுபவம் பெற்று விட்டால், அவர்களுக்கு ஆண்டு சம்பளம் 10 லட்சம் ரூபாய் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us