தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போலீஸ் பயிற்சி பள்ளி மாவட்டந்தோறும் துவக்க முடிவு

போலீஸ் பயிற்சி பள்ளி மாவட்டந்தோறும் துவக்க முடிவு

போலீஸ் பயிற்சி பள்ளி மாவட்டந்தோறும் துவக்க முடிவு


UPDATED : டிச 17, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


காரைக்குடி:
தமிழகத்தில் புதிதாகத் தேர்வாகும் போலீசாருக்குப் பயிற்சியளிக்க மாவட்டத்திற்கு ஒரு பயிற்சிப் பள்ளியைத் துவக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 1,500 போலீஸ் ஸ்டேஷன்களில் காலியாகவுள்ள இரண்டாம் நிலை போலீஸ்காரர்களை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவோருக்கு, உடற்கூறு பயிற்சி, சட்டம்-ஒழுங்கு வகுப்புகள், அதிரடிப்படை சார்ந்த பயிற்சிகள் என பல்வேறு விதமான பயிற்சிகள், ஒன்பது மாதத்திற்கு வழங்கப்படும்.
அனைவருக்கும் சென்னை போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி தருவதில் சிரமம் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பயிற்சி கொடுத்து, பின் மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. முன் கூட்டியே அவர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே பயிற்சியைக் கொடுப்பதன் மூலம் சென்னையிலுள்ள நெருக்கடியைத் தவிர்க்க முடியும் என, அரசு முடிவு செய்துள்ளது.
பயிற்சி பள்ளி: இதைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸ் பயிற்சிப் பள்ளி துவக்குவதற்குத் தேவையான இடங்களைத் தேர்வு செய்து தருமாறு, எஸ்.பி.,க்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்டந்தோறும் 200 போலீஸ்காரர்கள் வரை தங்கி பயிற்சி பெறும் வகையில் வளாகம் கட்டப்பட உள்ளது. இதற்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணி துரிதமாக நடந்து வருவதாகவும், விரைவில் பயிற்சிப் பள்ளிகள் துவங்கப்பட இருப்பதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us