பட்டதாரி ஆசிரியர் நியமனம் எதிர்த்த வழக்கை எதிர்த்து மனு
பட்டதாரி ஆசிரியர் நியமனம் எதிர்த்த வழக்கை எதிர்த்து மனு
UPDATED : டிச 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: பட்டதாரி ஆசிரியர்கள் 7,000 பேர் நியமிக்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ரத்தினகுமார் சார்பில் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு:
கடந்த ஆண்டு 7,200 ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் நியமிக்கப்பட்டனர். வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்யப்பட்ட சீனியாரிட்டிபடி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் பி.டி., அல்லது பி.எட்., பட்டம் பெற்றவர்கள். இந்த ஆண்டும் 7,000 ஆசிரியர்களை நியமிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு ஜூனியர் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் முடிந்து ஆசிரியர்களை நியமிக்கும் நிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போதைய நிலை தொடர வேண்டும் என ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டது. அதனால், நியமன உத்தரவுகளை அரசு வழங்கவில்லை.
இவ்வழக்கில் எங்களையும் இணைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். ஜூனியர் ஆசிரியர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
