தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலூர் பகுதி கல்வி செய்திகள்...

வேலூர் பகுதி கல்வி செய்திகள்...

வேலூர் பகுதி கல்வி செய்திகள்...


UPDATED : டிச 18, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சிருஷ்டி பள்ளிக்கு வெள்ளி பதக்கம்:
இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வேலூர் பிரிவு சார்பில் பள்ளிகளுக்கிடையேயான மாநில அளவிலான பளு துõக்கும் போட்டிகள் நேதாஜி மைதானத்தில் நடந்தது. இதில், வேலூர் சிருஷ்டி பள்ளியைச் சேர்ந்த மாணவர் சிபி சக்கரவர்த்தி 94 கிலோ எடை பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
மாநில கால்பந்து போட்டி: திருச்சியில் நடக்கும் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் பங்கேற்கும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு வழியனுப்பு விழா டிச. 17ம் தேதி நடந்தது. பள்ளி உடல் கல்வி இயக்குனர் நாராயணன் தலைமையில் மாணவர்கள் திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர்.

கருத்தரங்கு: வேலூர் காட்பாடி கிங்ஸ்டன் இன்ஜினியரிங் கல்லூரியில், ‘தொழில்நுட்பத் துறையில் எதிர்கால மாற்றங்களை சமாளிக்க’ மாணவ, மாணவிகள் தங்களை தயார்படுத்திக் கொள்வது குறித்த கருத்தரங்கு நடந்தது.
கல்லூரி முதல்வர்  சிவசங்கரன் வரவேற்றார். பெரியார் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி ‘மாறி வரும் தொழில் நுட்பத்துறையில் எதிர்கால மாற்றங்கள் குறித்தும், அதை சமாளிக்கும் வழி முறைகள்’ குறித்து பேசினார். மாணவி தீபிகா நன்றி கூறினார்.
 
ஆங்கிலப் பேச்சுப் போட்டி: ஐடா ஸ்கட்டர் பள்ளியில் பள்ளிகளுக்கிடையேயான ஆங்கிலப் பேச்சுப் போட்டி நடந்தது. இதில் வேலூர் சிருஷ்டி மெட்ரிக் மேனிலைப்பள்ளி மாணவியர் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஐயா ஸ்கட்டர் நினைவு சுழற் கோப்பையை தட்டிச்சென்றார்.
கவிதை ஒப்புவித்தல் போட்டியில் ஷித்தல், மகாலட்சுமியும், பேச்சுப்போட்டியில் இந்துஜா, சிம்ரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும் சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளி மாணவ, மாணவிகளும் இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். கவிதைப் ஓப்புவித்தல் போட்டியில் மாதவி நாயர் மூன்றாம் இடமும், பேச்சுப் போட்டியில் அபிலாஷ் முதலிடத்தையும், யோஹன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
 
தேர்வு நடத்தக் கோரி மாணவர்கள் முற்றுகை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரி அங்கீகாரம் பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ‘திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேர்வு துவங்கும் நேரத்தில் தேர்வுக்கூடம் ஒதுக்குவது, தேர்வு நடத்த அனுமதி உள்ளிட்ட எந்த பணிகளுக்கும் பல்கலைக்கழகம் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து, பாதிக்கப்பட்ட 100 மாணவர்கள் டிச. 17ம் தேதி பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டனர்.
பல்கலைக்கழக அலுவலர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பல்கலை பதிவாளர் ( பொறுப்பு ) அமுல் தாஸ் கூறும்போது,“நீதிமன்ற உத்தரவு இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் தேர்வு நடத்த தயாராக இருக்கிறோம்.
அதற்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது. வினாத்தாள் தயாரித்தல், தேர்வு கட்டணம் வசூலித்தல், ஹால் டிக்கட் தயார் செய்தல் போன்ற பணிகள் முடித்து விட்டு தேர்வு நடத்துவோம். அது வரை மாணவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்,” என்றார்.
 
நூற்றாண்டு கட்டிடம் திறப்பு விழா: வேலூர் ஊரிஸ் கல்லூரி நூற்றாண்டு விழா கட்டிட திறப்பு ஜன., 8ம் தேதி நடக்கிறது.
கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவரும், வி.ஐ.டி., பல்கலை வேந்தருமான விசுவநாதன், சி.எஸ்.ஐ., பிஷப் வில்லியம்ஸ், ஊரிஸ் கல்லூரி முதல்வர் டேனியல் எழிலரசு ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
பழமையான வேலூர் ஊரிஸ் கல்லூரிக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஜன., 8ம் தேதி வருகிறார். ஊரிஸ் கல்லூரியில் நடக்கும் தேசிய அளவிலான சமூக நிதி குறித்த மாநாட்டை அவர் துவக்கி வைக்கிறார். முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு விழா கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்து, நூற்றாண்டு நினைவு மலரை வெளியிடுகிறார்.
முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் ரூ. ஒரு கோடியே 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் மூன்று மாடிகளையும், 15 அறைகளையும், 2 ஆய்வகத்தையும் கொண்டது. ஜனாதிபதி துவக்கி வைக்கும் மாநாடு, பெண்களையும், இளைஞர்களையும் வலிமைபடுத்தும் வகையில் தேசிய அளவிலான சமூக நீதிகள் குறித்து வலியுறுத்தும் விதமாக அமையும்.
பெண்கள், இளைஞர்களுக்கு சமூக அறிவை கொடுத்து, சிந்திக்க வைத்து அவர்கள் உரிமைகளை புரிந்து கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களை பயன்படுத்திக் கொள்வது குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும். இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்திரி, அலகாபாத் வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் லால் மற்றும் மாணவர், ஆராய்சியாளர்கள், சமூக வல்லுனர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
 
வி.ஐ.டி., பல்கலை சார்பில் நலத்திட்ட உதவி: வேலூர் வி.ஐ.டி., பல்கலை வேந்தரின் மனைவி ராஜேஸ்வரி அம்மாள் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி ரூ. 9 லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us