வடகோவை மாநகராட்சி பள்ளிக்கு ஆடிட்டோரியம் கட்டித்தர முடிவு
வடகோவை மாநகராட்சி பள்ளிக்கு ஆடிட்டோரியம் கட்டித்தர முடிவு
UPDATED : டிச 19, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: “வடகோவை வடக்கு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு ஆடிட்டோரியம் (கலையரங்கம்) கட்டித்தரப்படும்,” என, கல்விக்குழு உறுதி அளித்துள்ளது.
வடகோவையில் உள்ள வடக்கு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 100 மாணவியர் உட்பட 600 பேர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், மாநகராட்சி கல்விக்குழு தலைவர் கல்யாணசுந்தரம், உறுப்பினர்கள் ஷோபனா, மீனா, செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பள்ளி வளாகத்தில் பழைய கட்டடங்கள் பல உள்ளன. அவற்றை இடித்துவிட்டு, பெரிய ஆடிட்டோரியம் கட்டலாம்; ஒரு ஏக்கரில் கால்பந்து மைதானம் மற்றும் கூடைப்பந்து மைதானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்விக்குழு உறுதியளித்தது.
பின், சித்தாபுதூர் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த குழுவினர், ‘ மரங்களின் வேர்கள், குடிநீர் தொட்டிக்குள் இருக்கின்றன. இதனால், மாணவியர் குடிநீரை பயன்படுத்த முடிவதில்லை. புதிய குடிநீர் தொட்டி விரைவில் கட்டித்தரப்படும். தனி கம்ப்யூட்டர் லேப் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றனர்.
தொடர்ந்து சித்தாபுதூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன் பாளையத்திலுள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
