தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘இக்னோ’வில் எம்.பி.ஏ., சேர்க்கை தகுதி தளர்வு

‘இக்னோ’வில் எம்.பி.ஏ., சேர்க்கை தகுதி தளர்வு

‘இக்னோ’வில் எம்.பி.ஏ., சேர்க்கை தகுதி தளர்வு


UPDATED : டிச 19, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 19, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலும் மேலாண்மை துறையில் மனிதமேம்பாடு, நிதிநிர்வாகம், விற்பனை மேலாண்மை பட்டயம் போன்ற முதுகலை பட்டயப் படிப்புகளுக்கும், வரும் பருவம் முதல் தளர்த்தப்பட உள்ளது.
இதற்கான தகுதியாக ஏதேனும் இளங்கலை பட்டம் மற்றும் 3 ஆண்டு பணி அனுபவம் அல்லது முதுகலை பட்டம் அல்லது பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வி படிப்பு மற்றும் இக்னோவால் நடத்தப்படும் ‘ஓப்பன்மேட்’ என்ற தேர்வு மூலம் சேர்க்கை நடந்து வந்தது.
தற்போது இக்னோவின் புதிய முடிவுபடி ஏதேனும் ஒரு இளங்கலை பல்கலை., பட்டத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற பொது பிரிவினர் மற்றும் மத்திய அரசின் இடஒதுக்கீட்டின் கீழ் வருவோரில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர் இக்னோவால் இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வில் பங்கேற்று மேற்கண்ட படிப்புகளில் சேரலாம்.
மேலும் இந்திய அளவில் மேலாண்மை படிப்புக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளான கேட், மேட் மற்றும் மாநில அரசால் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இக்னோவில் நுழைவுத் தேர்வு எழுதாமல் நேரடியாக மேலாண்மை படிப்புகளில் சேரும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. புதிய மாணவர்களும் இக்னோவில் இந்த படிப்புகளை படிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
2009 ஜூலை பருவத்திற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் இக்னோ மண்டல மையம் மற்றும் படிப்பு மையங்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இக்னோ இணையதளத்தில் (www.ignou.ac.in) இருந்தும் நகல் எடுத்துக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை புதுடில்லி, இக்னோ தலைமையகத்திற்கு டிச. 31க்குள் அனுப்ப வேண்டும். பிப்.1ம்தேதி கோவை, மதுரை, ஈரோடு, தூத்துக்குடி, திருச்சி இக்னோ மையங்களில் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்த விபரங்களுக்கு இக்னோ மண்டல மையம், சி.எஸ்.ஐ., கல்லூரி வளாகம், பசுமலை, மதுரை-4’ என்ற முகவரியில் நேரிலோ, 0452- 238 0387 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு அறியலாம். இத்தகவலை மண்டல இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us