தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களிடம் ‘டுடோரியல்’ மையங்கள் மோசடி

மாணவர்களிடம் ‘டுடோரியல்’ மையங்கள் மோசடி

மாணவர்களிடம் ‘டுடோரியல்’ மையங்கள் மோசடி


UPDATED : டிச 22, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டுடோரியலில் படிக்கும் மாணவர்களை 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வாக எழுத ஏற்பாடு செய்வதாகக் கூறி அவர்களிடம் சூப்பர் வசூல் நடத்தப்படுகிறது.
மாணவர்களை ஏமாற்றி, அரசு விதிமுறைகளை மீறி மாணவர்களுக்காக விண்ணப்பம் செய்கிற கொடுமையும் நடப்பதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்று கண்டுபிடிக்கப்படும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் நீக்கப்படுவதாகவும் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதி அதில் தோல்வி அடைந்த பாடங்களை மீண்டும் எழுதுவதற்காகவும், எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் நேரடியாக பத்தாம் வகுப்பும், பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுதவும் அதிகமான மாணவர்கள் டுடோரியலில் படிக்கின்றனர். தேர்வின்போது, தனித்தேர்வு மாணவர்களுக்கான விண்ணப்பத்தை பெற்று, தேர்வுத் துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுத் துறை நிர்ணயித்துள்ள கட்டணம் மிக மிக குறைவு. பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுத 120 ரூபாய் தான் கட்டணம். ஆனால், டுடோரியலில் படிக்கும் மாணவர்களிடம் தலா 500 ரூபாயும், அதே பிளஸ் 2 மாணவர்களாக இருந்தால் ஆயிரம் ரூபாயும் ஏமாற்றி வசூலிக்கப்படுகின்றன. ‘எல்லா வேலைகளையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம். பணத்தை மட்டும் கொடுங்கள்’ என்று கூறி வசூலை நடத்துகின்றனர்.
விவரம் அறியாத மாணவர்களும், கேட்ட பணத்தை கொடுத்து விடுகின்றனர். பத்தாம் வகுப்புத் தேர்வை நேரடியாக எழுத 14 வயது 6 மாதங்களும், பிளஸ் 2 தேர்வை நேரடியாக எழுத 16 வயது 6 மாதங்களும் பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆனால், டுடோரியல் மூலமாக மொத்தமாக ஏற்பாடு செய்யப்படும் விண்ணப்பங்களில் வயது குறைவான மாணவர்களுக்கும் சேர்த்து விண்ணப்பித்து விடுவதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற பல விண்ணப்பங்கள் ஆய்வின்போது அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு, நீக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
டுடோரியல் நிர்வாகிகள் மாணவர்களுக்காக விண்ணப்பம் செய்ய அதிகாரம் இல்லை. எனினும், எப்படியோ மொத்தமாக விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கின்றனர். அப்பாவி மாணவர்களை மையமாக வைத்து நடத்தப்படும் இத்தகைய வசூலை தடுத்து நிறுத்தவும், விதிமுறைக்கு மாறாக மாணவர்களை தேர்வெழுத வைக்க முயற்சி செய்வதை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us