அரசு அனுமதியின்றி புதிய படிப்பு அறிமுகம்: பல்கலைக்கு சுதந்திரம்!
அரசு அனுமதியின்றி புதிய படிப்பு அறிமுகம்: பல்கலைக்கு சுதந்திரம்!
UPDATED : டிச 23, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இதனை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அர்ஜுன் சிங் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தார். இந்த உத்தரவு 2009 கல்வி ஆண்டில் செயல்பாட்டிற்கு வருகிறது.
இதன்படி. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,) கல்வி நிறுவனங்கள் நியூக்ளியர் டெக்னாலஜி படிப்பையும் அரசின் முன்அனுமதியின்றி அறிமுகப்படுத்தலாம். தற்போதுள்ள நிலையில், நாட்டிலேயே ஐ.ஐ.டி.,கான்பூர் மட்டுமே நியூக்ளியர் இன்ஜினியரிங் அண்ட் டெக்னலாஜி படிப்பை வழங்குகிறது. இந்த புதிய அறிவிப்பால், ஐ.ஐ.டி., சென்னையும் 2009ல் நியூக்ளியர் இன்ஜினியரிங் படிப்பை வழங்க திட்டமிட்டுள்ளது.
ஆனால், ‘புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு அந்தந்த கல்வி நிறுவனங்களில் உள்ள கல்வி மற்றும் நிர்வாகக்குழுவால் பரிந்துரைக்கப்பட வேண்டும்‘ என்றும் மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் தெரிவித்தார்.
