தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செய்முறை தேர்வு பணி புறக்கணிப்பு: முதுநிலை ஆசிரியர்கள் எச்சரிக்கை

செய்முறை தேர்வு பணி புறக்கணிப்பு: முதுநிலை ஆசிரியர்கள் எச்சரிக்கை

செய்முறை தேர்வு பணி புறக்கணிப்பு: முதுநிலை ஆசிரியர்கள் எச்சரிக்கை


UPDATED : டிச 23, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 23, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
‘முதுகலை ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதில் உள்ள பிரச்னையை தீர்க்க, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், செய்முறைத் தேர்வு பணியை புறக்கணிப்போம்’ என்று, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர் கழகங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
கூட்டு நடவடிக்கை குழுவின் நிர்வாகிகள் சுப்பிரமணியன், மணிவாசகன், நிருபர்களிடம் கூறியதாவது:
பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவாக பதவி உயர்வு கிடைக்கிறது. குறுகிய காலத்தில் பதவி உயர்வு பெற்று, தங்களை விட அதிக தகுதிகள் கொண்ட முதுகலை ஆசிரியர்களுக்கு அதிகாரிகளாக வந்துவிடுகின்றனர்.
கடந்த 1981ல் போடப்பட்ட அரசாணை தான் எல்லாவற்றுக்கும் காரணம். அப்போது, முதுநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், பட்டதாரி ஆசிரியர்களை மனதில் கொண்டு அந்த அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது, முதுநிலை ஆசிரியர்கள் அதிகளவில் இருக்கின்றனர். எனினும், தற்போதைய நிலைமைக்கு ஏற்ப புதிய அரசாணை வெளியிடப்படவில்லை. இதனால், 20 ஆண்டுகளுக்குப் பிறகும் முதுகலை ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்ற நிலை இருக்கிறது.
முதுநிலை ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதில் உள்ள பிரச்னையைத் தீர்க்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளிகளுக்கென தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும். புதிய அரசாணை வெளியிட வேண்டும்.
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 7ம் தேதி முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 24ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்கும். இதற்குப் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால், செய்முறைத் தேர்வு உட்பட அனைத்து தேர்வுப் பணிகளையும் புறக்கணிப்போம். இந்த புறக்கணிப்பு போராட்டத்தில் 26 ஆயிரம் ஆசிரியர்கள் கலந்து கொள்வர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us