தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்த வழக்கு நிராகரிப்பு!

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்த வழக்கு நிராகரிப்பு!

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்த வழக்கு நிராகரிப்பு!


UPDATED : டிச 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதனையடுத்து, தமிழகத்தில் நியமிக்கப்பட உள்ள 7,500 பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 7,500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது. வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்ககத்தின் மூலம் ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம் பட்டியலை பெற்று, அதில் ஒரு பணியிடத்திற்கு இரண்டு பேர் வீதம் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
அனைவரது சான்றிதழ்களையும் சரிபார்த்து முடித்து, தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடுகிற நேரத்தில், இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தங்களுக்கு பதவி உயர்வு அளித்த பிறகு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், அதுவரை புதிய நியமனம் செய்யக்கூடாது என்றும் கோரியிருந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தடையை டிச. 23ம் தேதி விலக்கிக்கொண்ட ஐகோர்ட், இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியலை வெளியிடுவதற்கான பணிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன. கணிதம், ஆங்கிலம் பாடங்களுக்கான ஆசிரியர் பட்டியல் ஏற்கனவே தயாராகிவிட்டது.
இதர பாடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் டிச. 24ம் தேதி முடிவடைந்தால், மாலையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) முடிவுகள் வெளியாகும். பணிகளில் தாமதம் ஏற்பட்டால், 25ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. தேர்வுப் பட்டியல் வெளியானதும், ஜனவரி முதல் வாரத்தில் பணி நியமன கவுன்சிலிங் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
குறைகளை அரசிடம் தெரிவிக்க அறிவுறுத்தல்: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப 7,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐகோர்ட்டில் தமிழ்நாடு ஜூனியர் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஜோதிமணி, மனுதாரர் குறைகளை அரசிடம் முறையிடலாம். அதை அரசு பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டார். புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us