தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்த நன்கொடை திட்டம் அறிமுகம்

அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்த நன்கொடை திட்டம் அறிமுகம்

அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்த நன்கொடை திட்டம் அறிமுகம்


UPDATED : டிச 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


விருதுநகர்:
அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்துவதற்காக தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு தேவையான சீரமைப்பு பணிகள் அரசின் நிதியிலிருந்து செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக ஆண்டுதோறும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இருப்பினும் பெரும்பாலான பள்ளிகள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றன.
இவற்றை மேம்படுத்தும் வகையில் தொழில் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், கல்வி புரவலர்கள், முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்து செயல்பட அரசு  அழைப்பு விடுத்துள்ளது. பள்ளிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தனியார் பங்கினை அதிகப்படுத்த புதிய திட்டத்தை நடப்பாண்டில் துவங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் அரசுபள்ளிகளை 5 ஆண்டுகள்வரை தத்து எடுத்துக்கொண்டு அப்பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து பள்ளி வளர்ச்சியில் பங்குபெறுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளனர். ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாயும், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு 5 லட்சம் ரூபாயும் நன்கொடை வழங்குபவர்கள் அவர்கள் விரும்பும் பெயரை கல்வெட்டில் பொறித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us