பின்தங்கிய மாணவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை: இக்னோ அறிவிப்பு
பின்தங்கிய மாணவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை: இக்னோ அறிவிப்பு
UPDATED : டிச 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகளுக்கான கட்டணம் ஏற்கனவே குறைவாக இருக்கும் நிலையிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏராளமான மாணவர்கள் கல்வி கற்க இயலாமல் உள்ளனர். இதனை உணர்ந்த பல்கலைக்கழகம் தொழில்சார்ந்த படிப்புகளுக்கான கட்டணத்தை 50 சதவீதம் குறைந்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை கூறியதாவது:
பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது, டைய்ரி டெக்னாலஜி, மீட் டெக்னலாஜி போன்ற படிப்புகள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகின்றன.
இதுபோன்ற தொழில்சார்ந்த டிப்ளமோ படிப்புகளை படிக்கும் மாணவர்களில் 60 சதவீதம் பேர் சமூதாயத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள். அவர்களுக்கு கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும், கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
இத்தகைய மாணவர்களுக்காக கல்வி கட்டணம் குறைக்கப்படுகிறது. இந்த முயற்சி, உணவு தயாரிப்பு துறையில் உள்ள மனித ஆற்றல் தேவையை குறைக்க உதவும். இவ்வாறு துணைவேந்தர் தெரிவித்தார்.
இந்த கட்டண சலுகை ஜனவரி, 2009 முதல் அமலுக்கு வருகிறது.
