UPDATED : ஜன 16, 2009 12:00 AM
ADDED : மார் 18, 2009 08:32 AM
இந்தியாவின் புகழ் பெற்ற மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம்.,களில் எம்.பி.ஏ., போன்ற உயர் கல்வி படிக்க நடத்தப்படுவதே கேட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு என்பதை அறிவோம்.
இந்த கல்வியாண்டு படிப்புகளுக்காக நடத்தப்பட்ட கேட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வு முடிவுகள் காட்டும் சில தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.
* கேட் தேர்வு முடிவுகளைத் தீர்மானிக்க இந்த ஆண்டு முதன் முதலாக மாணவர்களின் பள்ளிப் பருவ மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
* இத்தேர்வில் 130 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவருக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக அறியப்படுகிறது.
* 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேறிய மாணவர்களுக்குக் கூடுதல் புள்ளிகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கே அதிக கல்வி நிறுவனங்களிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.
* அகமதாபாத் ஐ.ஐ.எம்.,மில் 33 சதவீத மதிப்பெண்கள் மாணவர்களின் கல்வித் தகுதிக்கும், 25 சதவீதம் கேட் தேர்வுக்கும் தரப்பட்டது. பெங்களூரு ஐ.ஐ.எம்.,மில் 25 சதவீதம் கேட் தேர்வுக்கும், 40 சதவீதம் கல்வித் தகுதிக்கும் 10 சதவீதம் பணி அனுபவத்துக்கும் தரப்பட்டது.
* இந்தூர் மற்றும் கோழிக்கோடு ஐ.ஐ.எம்.,களின் தேர்ச்சி முறை மட்டும் வெளிப்படையானதாக இல்லை.
* 7 ஐ.ஐ.எம்.,களில் தற்போது ஆயிரத்து 800 இடங்களே உள்ளன. இவற்றுக்கு கேட் தேர்வு என்பது முதற்கட்டத் தேர்வு மட்டுமே. இந்த ஆண்டு புதிதாக 6 ஐ.ஐ.எம்.,கள் துவங்கப்படவுள்ளன.
* இத்தேர்வை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 27 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.
* ஐ.ஐ.எம்.,கள் தவிர இந்தியாவில் மேலும் 50 மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களும் கேட் தேர்வு அடிப்படையில் மாணவர்களை படிப்பில் சேர்த்துக்கொள்கின்றன.
* கேட் தேர்வுக்கு அடுத்தபடியாக குழு விவாதம், நேர்காணல் போன்ற பிற கூடுதல் மதிப்பீட்டு முறைகளிலும் ஒருவர் தகுதி பெற வேண்டும்.
* தேர்வுகளில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்கள் தன்னம்பிக்கை, தகவல் பரிமாற்றத் திறன், பணிச் சூழல் திறன் போன்றவற்றை மேம்படுத்திக் கொண்டால் தான் படிப்புக்கான அனுமதியைப் பெற முடியும்.
