தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதியதாக 9 பல்கலைக்கழகங்களை துவக்கும் ஐ.சி.எப்.ஏ.ஐ.,

புதியதாக 9 பல்கலைக்கழகங்களை துவக்கும் ஐ.சி.எப்.ஏ.ஐ.,

புதியதாக 9 பல்கலைக்கழகங்களை துவக்கும் ஐ.சி.எப்.ஏ.ஐ.,


UPDATED : ஜன 17, 2009 12:00 AM

ADDED : ஜன 17, 2009 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 17, 2009 12:00 AM ADDED : ஜன 17, 2009 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐ.சி.எப்.ஏ.ஐ., என்னும் இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் பைனான்சியல் அனலிஸ்ட்ஸ் ஆப் இந்தியா என்னும் புகழ் பெற்ற இந்திய கல்வி நிறுவனம் புதிதாக 9 பல்கலைக்கழகங்களை துவக்கவுள்ளது.
மேலும் 2 புதிய கல்வி வளாகங்களையும் 2009ம் ஆண்டிற்குள் இந்த நிறுவனம் துவக்கவுள்ளது. தற்போது இந்த நிறுவனமானது இந்தியா வெங்கும் 19 வளாகங்களையும் 6 பல்கலைக்கழகங்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஐ.சி.எப்.ஏ.ஐ., அதன் மையங்களை நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ளது.
தற்போதைய சூழலில் கல்விக் கட்டண உயர்வு எதுவுமில்லை என்றும் ஐ.சி.எப். ஏ.ஐ., தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் 6 நாடுகளில் பன்னாட்டு கல்வி மையத்தை நிறுவவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்ட்,பிரிட்டனிலுள்ள லுட்டன், சுவிட்சர்லாந்திலுள்ள நியூசாட்டல் மற்றும் ஐக்கிய அரேபியக் குடியரசிலுள்ள ராஸ்-அல்-கைமா ஆகிய இடங்களில் ஐ.சி.எப்.ஏ.ஐ., சமீபத்தில் புதிய மையங்களை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us