தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மொபைல் நெட்வொர்க் குறித்த கருத்தரங்கு துவக்கம்

மொபைல் நெட்வொர்க் குறித்த கருத்தரங்கு துவக்கம்

மொபைல் நெட்வொர்க் குறித்த கருத்தரங்கு துவக்கம்


UPDATED : ஜன 20, 2009 12:00 AM

ADDED : ஜன 20, 2009 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 20, 2009 12:00 AM ADDED : ஜன 20, 2009 05:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தாம்பரம்:
அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி இயக்கம் மற்றும் மேற்குத் தாம்பரம் சாய்ராம் பொறியில் கல்லூரியின் தொழில் நுட்பத் துறை சார்பில், ‘மொபைல் நெட்வொர்க்’ என்ற தலைப்பிலான கருத்தரங்க முகாம் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 19ம் தேதி துவங்கியது. வரும் 30ம் தேதி வரை இம்முகாம் நடக்கிறது.

விழாவில் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், தொழில்நுட்பத் துறையின் தலைவருமான ஷீலா வரவேற்றார். பெங்களூரு மோட்டோ ரோலா ஆராய்ச்சிக் கழகத்தின் முதன்மை ஆய்வாளர் பத்மநாபன் ராமசாமி முகாமை துவக்கி வைத்தார்.

இந்தக் கருத்தரங்க முகாமில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த பொறியியல் கல்லூரிகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர். விழாவில் பேராசிரியர் நித்யானந்தம், கல்லூரியின் முதல்வர் ஜெயகுமார், இயக்குனர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us