UPDATED : ஜூன் 17, 2014 12:00 AM
ADDED : ஜூன் 17, 2014 10:29 AM
அ நிறம் | அளவு
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கலந்தாய்வின் ஒரு முக்கிய அம்சமான ரேங்க் பட்டியல்(Rank List) இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்விற்கான ரேங்க் பட்டியல் ஜுன் 16ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தங்களின் ரேங்க் விபரத்தை அறிந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், http://tnea.annauniv.edu/tharavarisai/ என்ற இணையதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.
பின்னர், தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விபரங்களை பொருத்தமான கட்டங்களில் உள்ளிட்டு, Enter பட்டனை தட்டினால், உங்களின் ரேங்க் விபரத்தை அறியலாம்.
