தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு இசைக் கல்லூரியில் புதிய பாடங்கள் துவங்கப்படுமா?

அரசு இசைக் கல்லூரியில் புதிய பாடங்கள் துவங்கப்படுமா?

அரசு இசைக் கல்லூரியில் புதிய பாடங்கள் துவங்கப்படுமா?


UPDATED : ஜூன் 17, 2014 12:00 AM

ADDED : ஜூன் 17, 2014 11:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2014 12:00 AM ADDED : ஜூன் 17, 2014 11:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை அரசு இசைக்கல்லூரியில் நான்கு பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை அரசு இசைக் கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகளை, கோவையிலும் துவங்க மாணவர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருவையாறு, கோவை ஆகிய நான்கு இடங்களில் அரசு இசைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையிலுள்ள அரசு இசைக் கல்லூரியில் குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல், நாதஸ்வரம், தவில், கடம், கஞ்சிரா, மோர்சிங், கிராமியக்கலை, பரதம் ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன; இசை ஆசிரியர் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

தவிர, தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலையுடன் இணைந்து இசை, நடனம் ஆகிய படிப்புகளுக்கு, மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு மாலை நேர வகுப்புகள் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து அரசு இசைக் கல்லூரிகளிலும், இளங்கலை பட்டப்படிப்பாக குரலிசை, வீணை, வயலின் ஆகிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக விளங்கும் கோவையிலுள்ள அரசு இசைக் கல்லூரியில் குரலிசை, வயலின், வீணை, பரதநாட்டியம் ஆகிய நான்கு படிப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றன; தவிர, இசை ஆசிரியர் பயிற்சியில், ஓராண்டு பட்டயப்படிப்பு, குரலிசை, வயலின், வீணை ஆகிய பாடங்களில் இளங்கலை பட்டப்படிப்பும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மிருதங்கம், புல்லாங்குழல், நாதஸ்வரம், தவில், கடம், கஞ்சிரா, மோர்சிங், கிராமியக்கலை ஆகியன பயில சென்னை செல்லவேண்டிய நிலை மாணவர்கள் இடையே காணப்படுகிறது. மதுரை, திருவையாறு ஆகிய கல்லூரிகளில் சென்னையிலுள்ள பாடங்களில் ஒரு சில பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது.

விரும்பிய பாடங்களை பயில சென்னை செல்லவேண்டிய நிர்பந்தம் மாணவர்கள் இடையே காணப்படுகிறது. எனவே, கோவை அரசு இசைக் கல்லூரியிலும் சென்னையிலுள்ள பாடப்பிரிவுகளை துவங்க மாணவர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

மாணவர்கள் கூறுகையில், "கோவையிலுள்ள அரசு இசைக் கல்லூரியில் நான்கு பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன. பிற பாடங்களை பயில, வெளியூர்களுக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வசதி படைத்த மாணவர்கள் வெளியூரில் தங்கி படிப்பார்கள். ஏழ்மை நிலையிலுள்ள மாணவர்கள் வெளியூர் செல்ல முடியாத அவல நிலையும் ஏற்படுகிறது.

தவிர, பரதநாட்டியம் பயிற்றுவிக்கும் நட்டுவாங்கம் எனும் பாடம் சென்னையில் மட்டுமே உள்ளது; பிற அரசு இசைக் கல்லூரியில் இப்பாடம் இல்லை. எனவே, சென்னையிலுள்ள பாடங்களை கோவையிலுள்ள அரசு இசைக் கல்லூரியிலும் விரைவில் துவங்க வேண்டும்" என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us