தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விளையாட்டை ஒரு கலாசாரமாக கொண்டு வரவேண்டும்: முன்னாள் டேபிள் டென்னிஸ் வீரர்

விளையாட்டை ஒரு கலாசாரமாக கொண்டு வரவேண்டும்: முன்னாள் டேபிள் டென்னிஸ் வீரர்

விளையாட்டை ஒரு கலாசாரமாக கொண்டு வரவேண்டும்: முன்னாள் டேபிள் டென்னிஸ் வீரர்


UPDATED : ஜூன் 17, 2014 12:00 AM

ADDED : ஜூன் 17, 2014 12:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2014 12:00 AM ADDED : ஜூன் 17, 2014 12:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: "இந்தியாவில் விளையாட்டை ஒரு கலாசாரமாக கொண்டு வந்து, மாணவ பருவத்திலேயே ஊக்குவிக்க வேண்டும்." என முன்னாள் டேபிள் டென்னிஸ் வீரர் கூறினார்.

ஊட்டி கிரசன்ட் பள்ளியில் டென்விக் அகாடமி மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி முதல்வர் உமர் பாரூக் வரவேற்றார்.

இதில் பங்கேற்ற முன்னாள் தேசிய டேபிள் டென்னிஸ் வீரர் வசந்த் பரத்வாஜ் கூறியதாவது: எங்களது அகாடமி மூலம் கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், செஸ், பேட்மிண்டன், கூடைப்பந்து விளையாட்டில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. விளையாட்டில் உள்ள நுணுக்கங்களை, சிறந்த நிபுணர்களை கொண்டு பாட புத்தகமாக தயாரித்து, அதை விஷூவல் முறையில் படித்து கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்தியாவில் விளையாட்டை ஒரு கலாசாரமாக கொண்டு வந்து, மாணவ பருவத்திலேயே ஊக்குவிக்க வேண்டும். பள்ளிகளில், வெறும் புத்தக படிப்பை மட்டும் போதிக்காமல், விளையாட்டு உட்பட மாணவ, மாணவியரின் பிற திறமைகளையும் வளர்க்க வேண்டும்.

தமிழகத்தில் ஒசூர், தர்மபுரியில் உள்ள பள்ளிகளில் இந்த அகாடமி மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. பல தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளிகளில் விளையாட்டுக்கென பிரத்யேக பயிற்சி வழங்க ஆர்வம் காட்டுகின்றன. அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்க தயாராக உள்ளோம்; அதற்கு மாநில அரசின் அனுமதியை கேட்டு கடிதம் வழங்கியுள்ளோம். இவ்வாறு, பரத்வாஜ் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us