பொறியியல் ரேங்க் பட்டியல் - தொழிற்பிரிவில் முன்னணி இடம் பிடித்தவர்கள்
பொறியியல் ரேங்க் பட்டியல் - தொழிற்பிரிவில் முன்னணி இடம் பிடித்தவர்கள்
UPDATED : ஜூன் 17, 2014 12:00 AM
ADDED : ஜூன் 17, 2014 02:04 PM
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல், அண்ணா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளதில், தொழிற்பிரிவில்(vocational stream), முன்னணி இடம் பெற்றவர்களின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.
BC பிரிவு
இப்பிரிவில், முதலிடத்தை, 200 கட்-ஆப் மதிப்பெண்களுடன், மெல்பா என்ற மாணவி பிடித்துள்ளார். இவர் கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர்.
இதேப் பிரிவில் இரண்டாமிடத்தை, 200 கட்-ஆப் மதிப்பெண்களுடன், சங்கர் பிரவு என்ற மாணவர் பெற்றுள்ளார். இவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்.
இந்தப் பிரிவில், மூன்றாமிடத்தை, 200 கட்-ஆப் மதிப்பெண்களுடன், அங்கு விக்னேஷ் என்ற மாணவர் பெற்றுள்ளார். மற்ற இருவரைப் போலவே, இவரும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரே.
MBC பிரிவு
இப்பிரிவில், முதலிடத்தை, 200 கட்-ஆப் மதிப்பெண்களுடன், ஆனந்த் என்ற மாணவர் பெற்றுள்ளார். இவர் சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுக்காவை சேர்ந்தவர்.
இதேப் பிரிவில், இரண்டாமிடத்தை, 199.833 கட்-ஆப் மதிப்பெண்களுடன், விக்னேஷ் என்ற மாணவர் பெற்றுள்ளார். இவர் ஈரோடு மாவட்டம் புதுவலவு கிராமத்தை சேர்ந்தவர்.
இப்பிரிவில், மூன்றாமிடத்தை, 199.50 கட்-ஆப் மதிப்பெண்களுடன், இலக்கியா என்ற மாணவி பெற்றுள்ளார். இவர் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர்.
BCM பிரிவு
இப்பிரிவில், முதலிடத்தை, 199.83 கட்-ஆப் மதிப்பெண்களுடன், அசாருதீன் பாஷா என்ற மாணவர் பெற்றுள்ளார். இவர் கோவை மாவட்டம், முதுகல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்.
SC பிரிவு
இப்பிரிவில், முதலிடத்தை, 198.5 கட்-ஆப் மதிப்பெண்களுடன், சசிகுமார் என்ற மாணவர் பெற்றுள்ளார். இவர் நாமக்கல் மாவட்டம், சேடப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்.
SCA பிரிவு
இப்பிரிவில், முதலிடத்தை, 196.17 கட்-ஆப் மதிப்பெண்களுடன், ஸ்ரீனிவாஷ் கண்ணன் என்ற மாணவர் பிடித்துள்ளார். இவர், நாமக்கல் மாவட்டம் காக்கய்யன் தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர்.
ST பிரிவு
இப்பிரிவில், முதலிடத்தை, 175.33 கட்-ஆப் மதிப்பெண்களுடன், மணிகண்டன் என்ற மாணவர் பிடித்துள்ளார். இவர் பால்பாறையின் வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர்.
