தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரிகளில் பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி: உத்தர பிரதேசத்தில் அமல்

கல்லூரிகளில் பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி: உத்தர பிரதேசத்தில் அமல்

கல்லூரிகளில் பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி: உத்தர பிரதேசத்தில் அமல்


UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM

ADDED : ஜூன் 18, 2014 10:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM ADDED : ஜூன் 18, 2014 10:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண்கள், சிறுமியருக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளில் பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்குமாறு முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

வன்முறை அதிகம்

நாட்டிலேயே பெண்களுக்கு அதிகமாக வன்முறை மற்றும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் உ.பி.யில் தான் நடக்கின்றன. அதிலும், சமீப காலமாக இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால், முதல்வர் அகிலேஷ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலைமையை இப்படியே விட்டால் சிக்கல் தான் என்பதை உணர்ந்த முதல்வர் அகிலேஷ் பள்ளி, கல்லூரிகளில் பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சிகளை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மாநில தலைநகர் லக்னோவில் பெண்கள் பாதுகாப்புக்காக 1090 என்ற பிரத்யேக தொலைபேசி எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், பெண்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புகார் மீது நடவடிக்கை

அதன் செயல்பாட்டை நேற்று ஆய்வு செய்த முதல்வர் அகிலேஷ், போலீஸ் உயரதிகாரிகளையும், உள்துறை செயலரையும் அழைத்து, இந்த மையத்தில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு, பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எனக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us