தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குஜராத் மாநில பள்ளிப் பாட புத்தகங்களில் தவறான தகவல்கள்

குஜராத் மாநில பள்ளிப் பாட புத்தகங்களில் தவறான தகவல்கள்

குஜராத் மாநில பள்ளிப் பாட புத்தகங்களில் தவறான தகவல்கள்


UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM

ADDED : ஜூன் 18, 2014 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM ADDED : ஜூன் 18, 2014 10:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானைதை தொடர்ந்து அம்மாநில கல்வித் துறை புத்தகங்களை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

"குஜராத் கவுன்சில் ஆப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் டிரெய்னிங்" மற்றும் "குஜராத் ஸ்டேட் போர்டு பார் ஸ்கூல் டெக்ஸ்ட்புக்" நிபுணர்கள் அடங்கிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சமூக அறிவியல் பாடப் புத்தகம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போர்

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி பயிலும் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த புத்தகத்தில், "காந்தியடிகள் 1948 அக்டோபர் 30ம் தேதி கொலை செய்யப்பட்டார், இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா மீது ஜப்பான் அணுகுண்டு தாக்குதல் நடத்தியது, இந்துகுஷ் மலையில் பிரிவினைக்குப் பின் புதிய நாடு உருவானது, அதன் பெயர் இஸ்லாமிக் இஸ்லாமாபாத், தென் இந்தியர்கள் மதராசிகள்" என்பது போன்ற பல தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

தனிக்குழு

இதுகுறித்த தகவல்கள் வெளியானதும் விழித்துக் கொண்ட அம்மாநில பள்ளிக் கல்வி துறை புத்தகங்களில் உள்ள தவறுகளை திருத்துவதற்கு தனி குழுவை நியமித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us