தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளநிலை உதவியாளர் பணி: 1,500 பேர் நியமனத்திற்கு காத்திருப்பு

இளநிலை உதவியாளர் பணி: 1,500 பேர் நியமனத்திற்கு காத்திருப்பு

இளநிலை உதவியாளர் பணி: 1,500 பேர் நியமனத்திற்கு காத்திருப்பு


UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM

ADDED : ஜூன் 18, 2014 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM ADDED : ஜூன் 18, 2014 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.என்.பி.எஸ்.சி. (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) தேர்வில் பள்ளிக் கல்வித் துறைக்கு பணி ஒதுக்கீடு பெற்ற 1,500 இளநிலை உதவியாளர்கள், இதுவரை பணி நியமனம் செய்யப்படவில்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ல் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கு போட்டித் தேர்வு நடந்தது. இதில், இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு பெற்றவர்களில் 1,500 பேர் பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர். ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், பள்ளி கல்வித் துறையிடம் ஒப்படைத்து பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு வேலை கிடைத்தும், பணியில் சேர முடியாத நிலையில் 1,500 பேரும் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, கல்வித் துறை பணியாளர்கள் கூறியதாவது: பணி நியமன பணியை மேற்கொள்ள வேண்டிய இணை இயக்குனர் கருப்பசாமி, பல்வேறு பணிகளில் பிசியாக உள்ளார். இதனால், பணி நியமன வேலை இழுத்துக் கொண்டே செல்கிறது. பல பிரிவுகளில், பணியாளர் இல்லை. மாநில அளவில், கல்வித் துறை அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளிலும், இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது.

தேர்வு பெற்றவர்களை உடனே பணி நியமனம் செய்திருந்தால், அலுவலகங்களில் வேலையும் நடந்திருக்கும்; அவர்களும் நான்கு மாதங்களாக சம்பளம் பெற்றிருப்பர். தற்போது, எதற்குமே வழியில்லாமல் காத்திருக்கின்றனர். கல்வித் துறைக்கு ஒதுக்கீடு பெற்ற அனைத்து இளநிலை உதவியாளர்களையும், உடனே பணி நியமனம் செய்ய, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us