தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தஞ்சை தமிழ் பல்கலையில் 20 சதவீத கட்டண சலுகை

தஞ்சை தமிழ் பல்கலையில் 20 சதவீத கட்டண சலுகை

தஞ்சை தமிழ் பல்கலையில் 20 சதவீத கட்டண சலுகை


UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM

ADDED : ஜூன் 18, 2014 12:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2014 12:00 AM ADDED : ஜூன் 18, 2014 12:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: தஞ்சை தமிழ் பல்கலை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அரசு பணியாளர்களுக்கான சிறப்பு முகாமை நாளை காலை 9.30 மணிக்கு நடத்துகிறது. இம்முகாமில் 20 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.

சேலம் குகை பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் தகவல் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மகாராஜபொம்மண்ணன் கூறியதாவது:

நடப்பு ஆண்டில் புதிய பாடப்பிரிவாக எட்டாம் வகுப்புக்கு இணையான அறிமுக நிலை படிப்பு ஆரம்பிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பள்ளி கல்வியை பாதியில் நிறுத்திய மாணவர்கள் சேர்ந்து தங்களுடைய மேல்படிப்பை தொடரலாம்.

இப்படிப்பை முடித்தவர்கள் மேல் படிப்பான 10, 12ம் வகுப்பு படிப்பதற்கு தகுதி பெறுகின்றனர். ஆட்டோ டிரைவர்கள், டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு தகுதி வாய்ந்த படிப்பாகும். விண்ணப்பங்கள் வரும் 20ம் தேதி வரை வழங்கப்படும்.

இளநிலை படிப்புகளான பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, தமிழிசை, பி.லிட், பி.எஸ்.சி. புவியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு, பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு 0427 - 4037874, 9367166151 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us