தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 செய்முறைத் தேர்வு: 28ம் தேதி ஆலோசனை

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு: 28ம் தேதி ஆலோசனை

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு: 28ம் தேதி ஆலோசனை


UPDATED : ஜன 25, 2009 12:00 AM

ADDED : ஜன 25, 2009 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2009 12:00 AM ADDED : ஜன 25, 2009 11:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
‘சென்னை மாவட்டத்தில் நடைபெறும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை, 37 ஆயிரத்து 375 மாணவர்கள் எழுதுவர்’ என்று சி.இ.ஓ., பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள், பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்கி இரண்டு கட்டங்களாக நடைபெறும். 403 பள்ளிகளில் பயிலும் 47 ஆயிரத்து 860 மாணவர்களில், 37 ஆயிரத்து 375 மாணவர்கள் செய்முறைத் தேர்வை எழுதுவர். இவர்களில், 16 ஆயிரத்து 976 பேர் மாணவர்கள். 20 ஆயிரத்து 399 பேர் மாணவிகள்.
அறிவியல் பிரிவில் 24 ஆயிரத்து 519 மாணவர்களும், இதர பிரிவுகளில் 12 ஆயிரத்து 856 பேரும் எழுதுவர். முதல் சுற்றில் 207 பள்ளிகளுக்கான மாணவர்களும், இரண்டாவது சுற்றில் 142 பள்ளிகளுக்கான மாணவர்களும் தேர்வை எழுதுவர். 1,457 ஆசிரியர்கள் புறத் தேர்வர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
செய்முறைத் தேர்வுகளை நடத்துவதற்கு ஆயத்தப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. விரிவான ஏற்பாடுகள் மற்றும் அது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 28ம் தேதி நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us