பள்ளிகளில் சிறுபான்மையின குழந்தைகள் சேரும் விகிதம் அதிகரிப்பு: டேட்டா
பள்ளிகளில் சிறுபான்மையின குழந்தைகள் சேரும் விகிதம் அதிகரிப்பு: டேட்டா
UPDATED : ஜூன் 19, 2014 12:00 AM
ADDED : ஜூன் 19, 2014 10:38 AM
டில்லி: பள்ளிகளில், முஸ்லீம் மாணவர்களின் சேர்க்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது மற்றும் SC/ST பிரிவு மாணவர்களின் சேர்க்கை சிறியளவில் குறைந்துள்ளது என்று மத்திய மனிதவள அமைச்சகத்தின் டேட்டா தெரிவிக்கிறது.
கடந்த 2012 - 13ம் ஆண்டிற்கான டேட்டாவை(Data) மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி வெளியிட்டார். அதில், Educational Development Index -படி, புதுச்சேரி யூனியன் பிரதேசம் முதலிடத்திலும், லட்சத்தீவுகள் இரண்டாமிடத்திலும், தமிழ்நாடு மூன்றாமிடத்திலும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் வருகின்றன.
நாடெங்கிலும், கல்வியானது வேகமாக தனியார் மயமாக்கப்பட்டு வரும் சூழலில், 60% க்கும் அதிகமான மாணவர் சேர்க்கை, அரசுப் பள்ளிகளில்தான் நிகழ்கிறது. 8% அதிகமான மாணவர் சேர்க்கை தனியார் உதவிபெறும் பள்ளிகளிலும், 27.8% மாணவர் சேர்க்கை தனியார் உதவிபெறாத பள்ளிகளிலும், 35.81% மாணவர் சேர்க்கை தனியார் மேனேஜ்மென்ட் பள்ளிகளிலும், 2%க்கும் மேல் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளிலும் படிக்கின்றனர்.
அமைச்சர் வெளியிட்ட டேட்டாவின்படி, தொடக்கப் பள்ளிகளில், முஸ்லீம் குழந்தைகளின் சேர்க்கை, 14.20% என்பதிலிருந்து, 14.35% என்பதாக அதிகரித்துள்ளது. அதேபோன்று, upper primary என்ற நிலையில், சேர்க்கை விகிதம் 12.11% என்ற அளவிலிருந்து, 12.52% என்பதாக அதிகரித்துள்ளது.
மேற்குவங்கம், குஜராத், பீகார் மற்றும் உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், இந்த ஏற்றம் காணப்படுகிறது. அதேசமயம், உத்ரகாண்ட் மாநிலத்தில், முஸ்லீம் மாணவர் சேர்க்கையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
