தொலைதூர கல்வி: சென்னை பல்கலையில் விண்ணப்ப வினியோகம் துவக்கம்
தொலைதூர கல்வி: சென்னை பல்கலையில் விண்ணப்ப வினியோகம் துவக்கம்
UPDATED : ஜூன் 19, 2014 12:00 AM
ADDED : ஜூன் 19, 2014 11:36 AM
சென்னை: சென்னை பல்கலை தொலைதூர கல்வி விண்ணப்ப வினியோகம் துவங்கியுள்ளது.
சென்னை பல்கலை அறிவிப்பு: சென்னை பல்கலை தொலைதூர கல்வி நிறுவன மாணவர் சேர்க்கை 16ம் தேதி முதல் துவங்கியுள்ளது. பல்கலை துணைவேந்தர் தாண்டவன் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
அக்டோபர் 31ம் தேதி வரை தொலைதூர படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பல்கலையின் ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையத்தில் விண்ணப்பங்களை பெறலாம்.
மேலும் தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள பல்கலையின் அங்கீகரிக்கப்பட்ட, கல்வி மையங்களில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களும், விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு பல்கலையின் www.unom.ac.in மற்றும் www.ideuunom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அல்லது பல்கலையின் தொலைதூர கல்வி மையத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
