காந்தி கலைமன்றத்தில் வினாடி வினா, எழுத்து, வாய்மொழி போட்டிகள்
காந்தி கலைமன்றத்தில் வினாடி வினா, எழுத்து, வாய்மொழி போட்டிகள்
UPDATED : ஜூன் 20, 2014 12:00 AM
ADDED : ஜூன் 20, 2014 11:13 AM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: தமிழக முன்னாள் முதல்வர் பி.எஸ்.குமாரசாமி ராஜா பிறந்தநாள்விழாவை முன்னிட்டு, ராஜபாளையம் காந்தி கலைமன்றத்தில் வினாடி வினா போட்டிகள் நடக்க உள்ளன.
இதில், அறிவியல் மற்றும் கலை கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, கல்வியியல் கல்லூரி, மேல்நிலை பள்ளி, உயர்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
ஜூலை 8ல் காந்தி கலைமன்ற மேனேஜிங் டிரஸ்டி பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா தலைமையில் எழுத்து, வாய்மொழி போட்டிகள் நடைபெற உள்ளன. மதுரை தியாகராஜர் கல்லூரி முன்னாள் முதல்வர் அருணகிரி போட்டிகளை நடத்துகிறார். ஆர்வம் உள்ள பள்ளி, கல்லூரிகள் 94888 51368 என்ற மொபைல் எண்ணில் பேசலாம்.
