UPDATED : ஜூன் 20, 2014 12:00 AM
ADDED : ஜூன் 20, 2014 11:31 AM
திருவள்ளூர்: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவியருக்கென, 36 விடுதிகளில் சேர்க்கை நடைபெறவுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் மாணவ, மாணவியருக்காக, 36 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில், 4 முதல் பிளஸ் ௨ வகுப்பு வரையும், கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் சேர தகுதியுடையவர்கள்.
தகுதி உள்ளவர்கள், விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் இருந்தோ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்று, விண்ணப்பிக்கவும். எனவே, மாணவ, மாணவியர் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
