தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி மூலம் 30 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி மூலம் 30 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
UPDATED : ஜூன் 20, 2014 12:00 AM
ADDED : ஜூன் 20, 2014 11:44 AM
சென்னை: தினமலர் நாளிதழின், உங்களால் முடியும் நிகழ்ச்சியில் தேர்வான, 30 மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் படிப்புக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தினமலர் நாளிதழுடன், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (பிராண்டிங் ஸ்பான்சர்) இணைந்து, பிளஸ் 2 முடித்து, இன்ஜினியரிங் கலந்தாய்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு வழிகாட்டும், உங்களால் முடியும் நிகழ்ச்சியை நடத்தின.தமிழகம் முழுவதும், 11 இடங்களில் நடந்த இந்த நிகழ்ச்சி, பெற்றோர், மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
இதில், தேர்வான, 30 மாணவர்களுக்கு, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்காக, கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, தி.நகர் வாணி மஹாலில் இன்று, மதியம், 2:00 மணிக்கு நடக்கிறது.
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின், இயக்குனர் ஸ்ரீராம், தினமலர் நாளிதழின் துணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியும் பங்கேற்று, கல்வி உதவித்தொகையை வழங்குகின்றனர். நிகழ்ச்சியில், கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி பங்கேற்று, மாணவர்களுக்கு, உத்வேகம் அளிக்க உள்ளார்.
உங்களால் முடியும் நிகழ்ச்சியை, தினமலருடன், ஜெ.என்.என்., இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங், பிரதான, ஸ்பான்சர் ஆகவும், தானிஷ் அகமது இன்ஜினியரிங் கல்லுாரி, இணை, ஸ்பான்சர் ஆகவும் இணைந்து நடத்தின.
