தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒருங்கிணைந்த சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் பொதுப் பட்டியல்

ஒருங்கிணைந்த சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் பொதுப் பட்டியல்

ஒருங்கிணைந்த சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் பொதுப் பட்டியல்


UPDATED : ஜூன் 20, 2014 12:00 AM

ADDED : ஜூன் 20, 2014 11:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2014 12:00 AM ADDED : ஜூன் 20, 2014 11:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரசு கலை கல்லுாரியில், ஒருங்கிணைந்த சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் பொதுப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை திருத்திக் கொள்ளலாம்.

அரசு கலை கல்லுாரிகள் ஒருங்கிணைந்த சேர்கைக்குழு அமைப்பாளர் சூரியபிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த சேர்க்கை முறையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு குழுமக் கல்லுாரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்., 23ம் தேதி முதல் கடந்த 16ம் தேதி வரை வழங்கப்பட்டது. இதில், 6623 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு, 5524 பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன.

விண்ணப்பித்தவர்களின் பொதுப் பட்டியல் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் உள்ள அறிவிப்பு பலகையில் இன்று 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை பார்வைக்கு வைக்கப்படுகிறது. சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்கள், பட்டியலைப் பார்த்து தங்களைப் பற்றிய தகவல்கள் சரியாக உள்ளனவா என தெரிந்து கொள்ள வேண்டும்.

தகவல்களில் பிழை திருத்தம் செய்ய வேண்டும் எனில், வரும் 24ம் தேதி மாலை 5:00 மணிக்குள், அங்குள்ள சேர்க்கைக்கான அலுவலகத்தில் தெரிவிக்கலாம். வரும் 24ம் தேதிக்குப் பிறகு எவ்விதமான தகவல் திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us