தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு - தமிழக அளவில் சென்னை மாணவர் முதலிடம்

ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு - தமிழக அளவில் சென்னை மாணவர் முதலிடம்

ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு - தமிழக அளவில் சென்னை மாணவர் முதலிடம்


UPDATED : ஜூன் 20, 2014 12:00 AM

ADDED : ஜூன் 20, 2014 12:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2014 12:00 AM ADDED : ஜூன் 20, 2014 12:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.,க்களில் (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்), உயர்கல்வி படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ.,) முடிவு வெளியிடப்பட்டது.

சென்னை மாணவர், ஆனிகட் முர்கேகர், தேசிய அளவில், 19வது இடம் பிடித்து, சாதனை படைத்தார். நாடு முழுவதும், 16, ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஜார்கண்ட் மாநிலம், தன்பாத்தில், இந்திய சுரங்க கல்லுாரி ஒன்றும் இயங்கி வருகிறது.

இந்த உயர்கல்வி நிறுவனங்களில், பல்வேறு இளங்கலை பட்ட படிப்புகளில் சேர, ஜே.இ.இ., எனும் நுழைவுத் தேர்வு, தேசிய அளவில் நடத்தப்படுகிறது.

ஜே.இ.இ., மெயின் (ஜாய்ன்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்) என்ற தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு என்ற, இரண்டாவது வகை நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.முதல்வகை தேர்வை, சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைகல்வி வாரியம்) அமைப்பும், இரண்டாவது வகை தேர்வை, சுழற்சி முறையில் ஏதாவது ஒரு ஐ.ஐ.டி.,யும் நடத்துகிறது.

நேற்று வெளியான இரண்டாம் வகை, இறுதி நுழைவு தேர்வு முடிவில், 27,151 பேர், ரேங்க் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். ஆனால், நாடு முழுவதும், 9,784 இடங்கள் தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, சித்ரங் முர்டியா என்ற மாணவர், 360க்கு, 334 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்.

தமிழக அளவில், சென்னை, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர், ஆனிகட் முர்கேகர், முதலிடம் பிடித்தார். இவர், 303 மதிப்பெண் எடுத்து, தேசிய அளவில், 19வது இடம் பிடித்தார். ஆனிகட் கூறியதாவது: எங்கள் குடும்பமே, டாக்டர் குடும்பம். எங்கள் உறவினர்களில் பலரும், டாக்டர்கள். ஆனால் நான், பொறியியல் படிக்க விரும்பி, நுழைவு தேர்வை எழுதினேன். முதுகலை படிப்பிற்கு, வெளிநாடு செல்வேன். தாய் நாட்டிற்கு திரும்பி வந்து சேவை செய்வேன், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us