தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: தர வரிசை பட்டியல் வெளியீடு

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: தர வரிசை பட்டியல் வெளியீடு

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: தர வரிசை பட்டியல் வெளியீடு


UPDATED : ஜூன் 21, 2014 12:00 AM

ADDED : ஜூன் 21, 2014 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2014 12:00 AM ADDED : ஜூன் 21, 2014 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டது.

புதுச்சேரி அரசு மற்றும் சொசைட்டி கல்லூரிகளில் முதலாமாண்டு காலியாக உள்ள 2108 இடங்களுக்கு, கப்பாஸ் உயர்கல்வி மையம் ஒருங்கிணைந்த முறையில் மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறது. இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு கடந்த 16ம் தேதி வரை, அந்தந்த கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டது.

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கப்பாஸ் உயர் கல்வி சேர்க்கை மையத்திற்கு அனுப்பியுள்ளனர். இவர்களுக்கான தர வரிசை பட்டியல் பாரதிதாசன் மகளிர் கல்லூரி வளாகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. கன்வீனர் சூரிய பிரகாசம் வெளியிட்டார்.

தரவரிசை பட்டியல் வெளியானதும் மாணவ மாணவிகள் பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் குவிந்து, ஆர்வமுடன் தரவரிசை பட்டியலை பார்வையிட்டனர். கலை அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பப்பித்துள்ள ஏராளமான மாணவர்கள் மருத்துவம், பொறியியல் படிப்பிற்கும் விண்ணப்பித்துள்ளதால், மருத்துவம், பொறியியல் கவுன்சிலிங் நடக்கும் தேதிக்கேற்ப, கப்பாஸ் கவுன்சிலிங் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us