தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம்

அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம்

அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம்


UPDATED : ஜூன் 21, 2014 12:00 AM

ADDED : ஜூன் 21, 2014 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2014 12:00 AM ADDED : ஜூன் 21, 2014 10:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மூன்று ஆண்டு பட்டயப் படிப்பிற்கு விண்ணப்ப வினியோகம் துவங்கியது.

சென்னை தரமணி எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, ஒலிப் பொறியியல், படம் பதனிடுதல், படத்தொகுப்பு ஆகியப் பிரிவுகளில் மூன்று ஆண்டு பட்டயப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இயக்குதல் பிரிவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து அரசு ஓவியம் மற்றும் கலைக் கல்லூரியில் பெற்ற பட்டம், பி.எஸ்.சி. விஷுவல் கம்யூனிகேஷன் பட்டம் பெற்றவர்கள், அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் பிரிவில் சேரலாம்.

முதலாம் ஆண்டு சேர விரும்பும் மாணவ, மாணவியர் அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, நேரில் சென்று வாங்கிக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு இணையதளத்தில் இருந்தும் (www.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us