தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏழ்மை, வேலைவாய்ப்பின்மையால் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு

ஏழ்மை, வேலைவாய்ப்பின்மையால் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு

ஏழ்மை, வேலைவாய்ப்பின்மையால் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு


UPDATED : ஜூன் 21, 2014 12:00 AM

ADDED : ஜூன் 21, 2014 11:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2014 12:00 AM ADDED : ஜூன் 21, 2014 11:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, போடி, வருஷ நாடு, கடலமலைக்குண்டு, ஆண்டிபட்டி உள்ளிட்ட பிற பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. மழை பெய்தால் தான் விவசாயம். இந்த பகுதியில் மழை இல்லாவிட்டால் வறட்சி நிலவும். இதனால் சிலர் குடும்பத்துடன் வெளி மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்கின்றனர். அவர்கள் கர்நாடகா, ஆந்திரா, டில்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று அப்பளம், முறுக்கு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர்.

மேலும் பலர் ரோட்டோர கடைகளில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். அவர்கள், இங்குள்ள ஏஜன்ட்கள் மூலம் கிராமங்களில் உள்ள ஏழைகள், ஆதரவற்ற குடும்பங்களில் உள்ள 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை தேர்வு செய்கின்றனர். குடும்பத்தின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் பெற்றோர், உறவினர்களை மூளைச் சலவை செய்து இரண்டு, மூன்றாண்டுகள் ஒப்பந்தத்தில் அழைத்துச் செல்கின்றனர்.

அங்கு இவர்களுக்கு 24 மணி நேரமும் வேலை தான். சில கம்பெனிகளில் பெற்றோருடன் மொபைல் போனில் பேச முடியாத நிலை. வேலையை ஒழுங்காக செய்யாவிட்டால், சிறுவர்களுக்கு சூடு வைத்தல் உள்ளிட்ட துன்புறுத்தல்களும் நடக்கிறது. சிறுவர்கள் தப்பித்து வரவும் முடியாமல், வழியும் தெரியாமல் மூன்றாண்டுகள் உடல் அளவிலும், மனதளவிலும் சித்ரவதை அனுபவிக்கின்றனர்.

அவர்கள் ஒப்பந்தத்தில் கூறியபடி முழு பணமும் கொடுப்பது அரிது. அதன் பின் இந்த சிறுவர்கள் பள்ளிக்கு செல்லாமல் சிறிய வேலைகளில் ஈடுபடுகின்றனர். அப்போது தான் தவறான சேர்க்கையால், அறியாமையால் சம்பளத்திற்காக சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதில் இருந்து இவர்களின் பாதை மாறிவிடுகிறது. இது போன்று தேனி மாவட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் வெளி மாநிலத்தில் வேலையில் உள்ளனர்.

கடந்த மே மாதம் தேனி மாவட்டத்தில் மட்டும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 647 பள்ளி செல்லா குழந்தைகள் மீட்கப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பாதிபேர் வெளி மாநிலம், மாவட்டங்களில் வறுமையால் வேலைக்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வறுமையால் வேலைக்கு செல்லும் நிலையில் உள்ள சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவித் தொகையுடன் கல்வி வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

சமூக ஆர்வலர் சர்ச்சில் துரை கூறியதாவது: "ஏழ்மை, இயலாமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் பிற இக்கட்டான சூழ்நிலைகளை பயன்படுத்தி, ஒரு இடத்தில் இருந்து தொலை தூரங்களுக்கு பெற்றோரின் சம்மதத்துடன் வேலைக்கு அழைத்து செல்வது குழந்தை கடத்தல் (சைல்ட் டிராபிக்). இது தேனி மாவட்டத்தில் அதிகம் உள்ளது.

இவர்கள் அடிமையாகவும், பாலியல் தொந்தரவிற்கும் உட்படுத்தப்படுகின்றனர். சிறுவர்கள் கடத்தல், வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பதை தடுக்க இலவச தொலைபேசி எண்:1098 ல்(சைல்ட் லைன்) அழைத்து தெரிவித்தால், அவர்கள் மாவட்ட அதிகாரிகளுடன் சேர்ந்து விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us